நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

SaiSai
Nov 27, 2025 - 05:56
Nov 27, 2025 - 05:57
 0  18
நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

2025.11.27

மஸ்கெலியா நிருபர் 

நிலவும் கடுமையான மழையுடன் கூடிய பாதகமான வானிலை காரணமாக, மத்திய மாகாணத்தின் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அறிவிப்புகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (26) வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்தண்டஹின்ன, மதுரட்ட மற்றும் கண்டி மாவட்டத்தில் உடதும்பர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மூன்றாவது கட்ட எச்சரிக்கையில் வெளியேற்றத்திற்கான சிவப்பு அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டம், கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர, பத்தஹேவாஹெட்ட, கங்காவத்த கோரளே பிரதேச செயலகப் பிரிவுகள் இரண்டாம் நிலை எச்சரிக்கையிலும், கண்டி மாவட்டத்தில் உடுநுவர, உட பலாத்த, தும்பனை, கங்கா இஹல கோரளே, பஸ்பாகே கோரளே, பததும்பர, பன்வில, தொலுவ, மெததும்பர, மினிபே பிரதேச செயலகப் பிரிவுகள், மாத்தளை மாவட்டத்தில் நாவுல, யடவத்த, ரத்தோட்ட, அம்பங்கங்க கோரளே, உக்குவெல பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ மற்றும் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவுகள் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் முதலாம் நிலை எச்சரிக்கையிலும் இருக்குமாறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த மண்சரிவுக்கு முன்னதாக சிவப்பு எச்சரிக்கை விடுத்த பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்கள் இந்த விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்துமாறும், பிற எச்சரிக்கை விடுத்த பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்கள் அந்த எச்சரிக்கைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு அறிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow