யாழ் நல்லூர் திருவிழாவில் வாள் வெட்டு!

குறித்த வன்முறை சம்பவம் ஆலய திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நல்லூர் திருவிழாவின் கார்த்திகை திருவிழாவான சனிக்கிழமை ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். அந்நிலையில் , வன்முறை கும்பல் ஒன்று நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகாமையில் உள்ள அரசடி பகுதியில் , பெருமளவான மக்கள் கூட்டத்தின் மத்தியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.தாக்குதலில் காயமடைந்த இளைஞன், தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள வீதி தடையை தாண்டி நல்லூர் ஆலய சூழலை நோக்கி தப்பியோடிய போதும் , தாக்குதலாளிகள் வாளுடன் இளைஞனை துரத்தி சென்று தாக்குதல் நடாத்த முற்பட்ட நிலையில் ஆலய சூழலில் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸார் விரைந்து செயற்பாட்டு தாக்குதலாளிகளில் ஐவரை கைது செய்துள்ளனர் அதேவேளை தாக்குதலில் காயமடைந்த இளைஞனை மீட்டு , நோயாளர் காவு வண்டியில் , யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

SaiSai
Aug 18, 2025 - 05:03
 0  21
யாழ் நல்லூர் திருவிழாவில் வாள் வெட்டு!
யாழ் நல்லூர் திருவிழாவில் வாள் வெட்டு!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow