made in Korea -காசு நிறைய இருந்தால் வாங்கி போடுங்க!

SaiSai
Oct 27, 2025 - 22:19
 0  19
made in Korea -காசு நிறைய இருந்தால் வாங்கி போடுங்க!

Made in Korea : காசு நிறைய இருந்தால் வாங்கிப் போடுங்க!! 

வர்த்தகம்

Kia புத்தம் புதிய 2026 Sorento Hybrid, அற்புதமான EV5 உடன் வாகனத்துறையை மறுவரையறை செய்கிறது. 

Kia புத்தம் புதிய 2026 Sorento Hybrid மற்றும் அற்புதமான EV5 உடன் இலங்கையின் வாகனத்துறையை மறுவரையறை செய்கிறது. 

Kia Motors Lankaவானது கொழும்பில் நடைபெற்ற பிரத்தியேக ஊடகவியலாளர் மாநாட்டில் 2026 Kia Sorento Hybrid மற்றும் Kia EV5 ஆகிய இரண்டு முக்கிய மொடல்களை ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தியதன் மூலம், இலங்கையின் மோட்டார் துறையில் ஒரு புதிய சகாப்தத்திற்கு களம் அமைத்துள்ளது.

இலங்கையில் மோட்டார் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதிலிருந்து உள்நாட்டு சந்தைக்கு Kiaவின் மிக முக்கியமான அறிமுகத்தை இந்த இரட்டை வெளியீடுகளும் குறிக்கிறது, மேலும் மின்மயமாக்கலின் அலையால் இந்தத் துறை மறுவடிவமைக்கப்படும் நேரத்தில் இந்த அறிமுகமானது நிகழ்கிறது.

புதிய உள்நுழைபவர்கள் மற்றும் மின்சார விருப்பங்களால் நிரம்பி வழியும் சந்தையில், Kia Motors இரண்டு வாகனங்களில் பாரம்பரியத்தையும் புதுமையையும் ஒன்றிணைத்து, பாராட்டப்படும் SUV தயாரிப்பாளரிடமிருந்து நிலையான இயக்கத்தில் புத்தாக்கமாக வர்த்தகநாமத்தின் பரிணாமத்தை ஒன்றாகக் கொண்டுள்ளது. 

நிகழ்வில் உரையாற்றிய Kia Motors (Lanka) தலைவர் திரு. மஹேன் தம்பையா, இன்றைய அறிமுகம் இரண்டு உலகங்களின் பாலத்தையும், இலங்கையர்கள் அறிந்த மற்றும் விரும்பும் நம்பகமான Kia பாரம்பரியத்தையும், நமது உலகளாவிய திசையை வரையறுக்கும் தைரியமான, மின்மயமாக்கப்பட்ட எதிர்காலத்தையும் குறிக்கிறது. Sorento Hybrid ஒரு சின்னத்தின் கதையைத் தொடர்கிறது. 

அதே நேரத்தில் EV5 முழு மின்மயமாக்கலை நோக்கிய Kiaவின் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கிறது.

சந்தையில் உள்ள உள் எரிப்பு இயந்திரம் (ICE) மொடல்களுக்கு மேலதிகமாக Kia ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட Sportage, Sorento மற்றும் Carnival தவிர மூன்று புதிய ஹைப்ரிட் மொடல்களையும், சந்தையில் வழங்கப்படும் EV9, EV6 மற்றும் EV5 களுக்கு மேலதிகமாக மூன்று புதிய மின்சார மொடல்களையும் 2026 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow