பாதையில் சென்றாலே சார்ஜ் ஆகிவிடும் வாகனங்கள்!
பாதையில் சென்றாலே சார்ஜ் ஆகிவிடும் வாகனங்கள்!!
உலகம் முழுவதும் பிரபலமாகும் சார்ஜிங் சாலைகள்..!!
மின்சார வாகனங்கள் சாலையில் பயணிக்கும்போதே தானாக சார்ஜ் செய்துகொள்ள உதவும் 'வயர்லெஸ் சார்ஜிங் சாலைகள்' தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.
உலகின் முதல் வயர்லெஸ் சார்ஜிங் சாலையை நார்வே அமைத்து முன்னோடியாக திகழ்கிறது. அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தின் டெட்ரோய்ட் பகுதியிலும் 400 மீட்டர் தொலைவுக்கு இந்த சாலை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவிலும் இந்த தொழில்நுட்பம் தற்போது சோதனை முறையில் உள்ளது.
இந்தச் சாலைகள், கீழே பதிக்கப்பட்டுள்ள காப்பர் கம்பிகள் மூலம் மின்சாரத்தை, வாகனத்தின் அடிப்பகுதியில் உள்ள பேட்டரிக்கு வயர்லெஸ் முறையில் கடத்துவதன் மூலம் செயல்படுகின்றன.
இது நீண்ட தூரம் பயணிப்போரின் சார்ஜிங் கவலையை போக்கி, மின் வாகன விற்பனையை அதிகரிக்க உதவும் என நம்பப்படுகிறது.
உலக அளவில் இந்த தொழில்நுட்பப் புரட்சி நடந்தாலும், இலங்கை இந்தியாவில் இதுவரை வயர்லெஸ் சார்ஜிங் சாலைகள் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை.
மின் வாகன பயன்பாட்டை அதிகரிக்க, இதுபோன்ற தொழில்நுட்ப புரட்சியில் பின்தங்காமல் ஆசிய நாடுகளும் முன்னேற வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
What's Your Reaction?



