மக்கள் வங்கியின் தலைமையகம் திறப்பு!

SaiSai
Oct 9, 2025 - 23:29
 0  16
மக்கள் வங்கியின் தலைமையகம் திறப்பு!

மத்திய வங்கி ஆளுநர் சிரிக்கவே மாட்டாரா? 

மக்கள் வங்கியின் தலைமையகத்தை திறந்து வைத்தார் கலாநிதி பி.நந்தலால்!! 

மக்கள் வங்கியின் புதிய தலைமை அலுவலகக் கட்டிடமான ‘மக்கள் ex கோபுரம்’, கொழும்பு 2, கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா மாவத்தை, இலக்கம் 374 இல், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் அமைச்சின் செயலாளர் ஹர்ஹான சுரியா ஆகியோரின் தலைமையில் நேற்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

அறுபத்து நான்கு வருடங்களுக்கும் மேலாக, பொது மக்களுக்கு நிதி வசதிகளை வழங்கி நாட்டின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஈடு இணையற்ற பங்களிப்பை வழங்குவதன் மூலம் தேசத்தின் அபிவிருத்திக்காக மக்கள் வங்கி ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. 

இந்த புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழா இலங்கையின் வங்கி மற்றும் நிதி வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது.

இது வங்கியின் வளர்ச்சியை மட்டுமல்ல, நாட்டின் பரந்த பொருளாதார முன்னேற்றத்தையும் அடையாளப்படுத்துகிறது, அதே நேரத்தில் வங்கியின் சேவைகளை நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் மேலும் விரிவுபடுத்துவதற்கான வலுவான அடித்தளமாக செயல்படுகிறது.

புதிய தலைமை அலுவலக கட்டிடமானது 22 மாடிகள் மற்றும் மூன்று அடித்தள நிலைகளை உள்ளடக்கியது, இது மக்கள் வங்கியின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை கொள்கைக்கு இணங்க முற்றிலும் பசுமை கட்டிடம் கருத்தின்படி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

இது ஒரு முழுமையான ஆடிட்டோரியம், ஆவணப்படுத்தல் பிரிவு, நவீன சிற்றுண்டிச்சாலை, மருத்துவ மையம், பல மாநாட்டு அறைகள் மற்றும் பல சிறப்பு வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்த வளாகத்தில் மக்கள் வங்கி பணியாளர்கள் பயிற்சிக் கல்லூரியும் அடங்கும், அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட டிஜிட்டல் வங்கி வசதிகளை வழங்குவதற்காக யூனியன் பிளேஸ் கிளையும் கட்டிடத்திற்குள் நிறுவப்பட்டுள்ளது.

மக்கள் வங்கியின் புதிய தலைமை அலுவலகத்தை திறந்துவைக்கும் முகமாக தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட விசேட நினைவு அட்டை மற்றும் முத்திரையொன்று இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது.

கொழும்பு 2, சர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தையில் அமைந்துள்ள மக்கள் வங்கியின் முந்தைய தலைமை அலுவலகம் 1977 இல் திறந்து வைக்கப்பட்டது. 

பல தசாப்தங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்ட இந்த புத்தம் புதிய தலைமை அலுவலகம், அரசுக்கு சொந்தமான நிதி நிறுவனம் மற்றும் தேசிய சொத்தாக மக்கள் வங்கியின் வலிமை, புதுமை, செயல்திறன் மற்றும் பெருமையை பிரதிபலிக்கிறது.

சம்பிரதாய திறப்பு விழாவில், மக்கள் வங்கியின் தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோ, பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா, கூட்டுத்தாபன மற்றும் நிறைவேற்று முகாமைத்துவ குழு, விசேட அழைப்பாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow