இலங்கை பொலிஸ் வழங்கும் விளக்கம்?
இந்தியா, ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இருந்ததா..? Never - இந்தியா எப்போதும் நல்ல பிள்ளை!!
"ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாக ஒருபோதும் கூறவில்லை" - இலங்கை போலீஸ் விளக்கம்
2019 ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள முக்கிய சதிகாரர் அடையாளம் காணப்பட்டதாகவும், தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எஸ்டிஐஜி ரவி செனவிரத்ன தெரிவித்ததாக வெளியான செய்திகளை இலங்கை காவல்துறை மறுத்துள்ளது.
அண்மையில் உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக் குழுவின் முன்னிலையில் ரவி செனவிரத்ன இந்த தகவலை வெளியிட்டதாக பரவி வரும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என இலங்கை காவல்துறை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
நேற்று (08) இடம்பெற்ற உயர் பதவிகளுக்கான குழுவின் கூட்டத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ரவி செனவிரத்ன பதிலளித்ததாகவும், தாக்குதல்களில் இந்தியா ஈடுபட்டதாக எந்த சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான செய்திகளை மறுத்த காவல்துறை, அவை பொய்யானவை என்றும், ஆதாரமற்றவை என்றும் தெளிவுபடுத்தினர்.
இவ்வாறான பொய்யான தகவல்களை பரப்பும் நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் ரவி செனவிரத்னவின் சட்டத்தரணிகளுக்கு இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
What's Your Reaction?



