மாவனெல்லை – ரம்புக்கனை பகுதி மரம் சரிந்து வீழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்

SaiSai
Nov 24, 2025 - 10:29
Nov 24, 2025 - 10:32
 0  24
மாவனெல்லை – ரம்புக்கனை பகுதி மரம் சரிந்து வீழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்
மாவனெல்லை – ரம்புக்கனை பகுதி மரம் சரிந்து வீழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்
மாவனெல்லை – ரம்புக்கனை பகுதி மரம் சரிந்து வீழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்

மாவனெல்லை – ரம்புக்கனை வீதியின் தலைகொல்ல பகுதியில் ஏற்பட்ட மரம் சரிந்து வீழ்ந்த விபத்தில் இரண்டரை வயது குழந்தை, 48 வயது பெண் மற்றும் 57 வயது ஆண் ஒருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்து மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (23) ஏற்பட்ட இந்த விபத்தில் முச்சக்கார வண்டி ஒன்றின் மீது பாரிய மரம் சரிந்து விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அதில் இருந்த கடை ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டதற்கான முக்கிய காரணம் — வீதியின் தலைகொல்ல பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டிருந்த போதும், முச்சக்கார வண்டி அப்பகுதியில் பயணம் செய்ததே என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது முச்சக்கார வண்டிக்குள் இருந்த குழந்தையை உட்பட நான்கு பேர் சிக்கியிருந்தனர். அருகிலிருந்த பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து அவர்களை மீட்டனர்.

அனுமதிக்கப்பட்ட நிலையில் இருந்த முச்சக்கர  வண்டியின் சாரதி 37 வயதானவர் உயிரிழந்ததாகவும் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த இரண்டரை வயதான சிறுமி, 48 வயதான பெண் மற்றும் 57 வயதான ஆண் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow