2000 வேண்டும் மஸ்கெலியாவில் போராட்டம்!
நாளாந்தம் 2000/= வேதனம் கோரி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனங்களுக்கு எதிராக கட்சி பேதமின்றி தொழிலாளர்களாக முன் வந்து இந்த சம்பள போராட்டத்தை இன்று 18 ம் திகதி மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட தேயிலை தொழிற்சாலை பகுதியில் இடம் பெற்றது.
இப் போராட்டமானது அரசுக்கு எதிராக இல்லை என்றும், இது பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உரிமை போராட்டமென பெருந்தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
போராட்டக்காரர்கள் இன்றைய அரசு முதலாவது பாதீட்டில் 1700/= பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனம் வழங்குவதாக கூறியே ஆட்சி பீடம் ஏறினார்கள் இருந்த போதிலும் இரண்டாவது பாதிட்டு வாசிப்பு இன்றைய ஜனாதிபதி வாசிக்க உள்ள நேரத்தில் எமக்கு இன்றைய விலைவாசி க்கு ஏற்ப 2000/= ரூபாய்க்கு மேல் வேதனம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து சுமார் முன்னூறுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஒரு மணி நேரம் போராட்டம் நடத்தினர்.
அதன் பின்னர் அவர்கள் பணிக்கு சென்றனர்.
மஸ்கெலியா விசேட நிருபர்.
What's Your Reaction?



