விரைவில் நாட்டின் அரசியலில் பாரிய சுழல் காற்று வீசும்-எச்சரிக்கும் மஹிந்த!
மஹிந்தவின் புதிய போஸ்ட்!!
" காலநிலை அவதானி" - சுழல் காற்று வீசுமாம்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எச்சரிக்கை!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில், நாட்டின் அரசியல் சூழல் குறித்து முக்கியமான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
“விரைவில் நாட்டின் அரசியலில் பாரிய சுழல்காற்று வீசக்கூடும்” என அவர் எச்சரித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டது:
தமது மீது வரும் விமர்சனங்களுக்கு கவலைப்பட தேவையில்லை.
தற்போது கால்டனில் வசித்து வருவதாக இருந்தாலும், தேவை ஏற்பட்டால் கொழும்பிற்கு வர தயாராக உள்ளார்.
இளைஞர்கள் முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல், ஜனநாயக ரீதியிலேயே தமது உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தன் வேண்டுகோள்.
அரசியல், பொருளாதாரம், யுத்த வெற்றி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு, எதிர்கால அரசியல் சூழலில் பெரிய மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற எச்சரிக்கையுடன், இளைஞர்களுக்கு ஜனநாயக பாதையைத் தொடருமாறு மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
What's Your Reaction?



