ரிச்சார்ட்டின் மனு விசாரணைக்கு!

SaiSai
Oct 2, 2025 - 18:14
 0  25
ரிச்சார்ட்டின் மனு விசாரணைக்கு!

தாம் எந்தவித அடிப்படையும் இன்றி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமைக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை 2026 ஆம் ஆண்டு, மார்ச் 25 ஆம் திகதி மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (02) திகதி நிர்ணயித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு எவ்வித காரணங்களும் இன்றி கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய ஆயம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலணைக்குட்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow