வசிம் தாஜூடினின் கொலையை மூடி மறைத்தவர்கள் இந்த அரசாங்கத்தில் உள்ளனர் -முஜிபுர் ரஹ்மான்?

SaiSai
Oct 2, 2025 - 19:14
 0  15
வசிம் தாஜூடினின் கொலையை மூடி மறைத்தவர்கள் இந்த அரசாங்கத்தில் உள்ளனர் -முஜிபுர் ரஹ்மான்?

2012 ஆம் ஆண்டில் நடந்த வாசிம் தாஜுதீன் கொலையை மூடிமறைப்பதில் ஈடுபட்ட சிலர், தற்போதைய அரசாங்கத்தில் இருப்பதாக முஜிபூர் ரஹ்மான் Mp குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, ஈஸ்டர் ஞாயிறு படுகொலைகள் மற்றும் வாசிம் தாஜுதீன், லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரதீப் எக்னெலிகொட ஆகியோரின் கொலைகளுக்கு காரணமானவர்களைக் கைது செய்வதாக NPP உறுதியளித்தது.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், ஜனாதிபதிஅனுரகுமார திசாநாயக்க மற்றும் ஏனைய மூத்த பேச்சாளர்கள் அதையே மீண்டும் கூறினர், ஆனால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

முந்தைய அரசாங்கங்களின் நலன்களுக்கு சேவை செய்த பலர் தற்போதைய அரசாங்கத்தில் இருக்கின்றனர். எனவே, அரசாங்கம் முழு மூச்சாகச் செல்லும் என்று மக்கள் எதிர்பார்க்க முடியாது என முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow