மஸ்கெலியா வைத்தியசாலையில் உள்ளவர்களுக்கு கொலை மிரட்டல் விட்டவருக்கு நடந்த கதி!
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் 29 ம் திகதி வரை விளக்கமறியலில்.
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த 23 வயது உடைய டீ சைட் தோட்டத்தைச் சேர்ந்த அக்குல்ராஜ் ஹறிஷன் நேற்று மாலை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார பணிப்புரைக்கமைய கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் இன்று 25 ம் திகதி ஹட்டன் நீதிமன்ற நீதிபதி கௌரவ பீட்டர் போல் அவர்கள் முன்னிலையில் ஆஜர் படுத்த பட்ட வேலையில் நீதிவான் சந்தேக நபரை எதிர் வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தது உள்ளார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய சார்ஜன்ட் பேரின்ப நாயகம் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்
What's Your Reaction?



