மஸ்கெலியாவில் 15 வயது மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!

SaiSai
Sep 30, 2025 - 08:42
Sep 30, 2025 - 08:43
 0  210
மஸ்கெலியாவில் 15 வயது மாணவன்  தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!

மஸ்கெலியா லக்கம் தனியார் தோட்டத்தில் 15 வயது பாடசாலை மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில்.

 மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்கம் தனியார் தோட்டத்தில் 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மரணமான சம்பவம் ஒன்று நேற்று இரவு பதிவாகியுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறித்த சம்பவம் நேற்று 29/09/2025 திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் நடந்திருக்கலாம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ள மாணவன் லக்கம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவன் என்பதோடு குறித்த மாணவன் நேற்று திங்கட்கிழமை காலை பாடசாலை சென்று மாலை 5.00 மணியளவில் வீடு திரும்பி உள்ளதுடன் 6.00மணியளவில் பக்கத்து வீட்டார் குறித்த மாணவனை வீட்டின் அருகே கண்டதாக தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் அவனது தந்தை காலையில் வீட்டிலிருந்து அலுவல் காரணமாக நுவரெலியா சென்று வந்த தந்தை 7.00 மணிவரை மகனை காணவில்லை என்பதால் தேட ஆரம்பித்துள்ளார் அப்போது ஊர் முழுவதும் தேடி விட்டு தனது வீட்டின் சமையலறைக்கு அருகில் உள்ள இருட்டு அறையில் தனது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டுள்ளார். 

மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக பிரதேசவாசிகள் உடனடியாக மஸ்கெலியா பொலிசாருக்கு தகவல் வழங்கியதுடன் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ் புஸ்ப்பகுமார உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சம்பவம் தொடர்பாக விசாரனைகளை ஆரம்பித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பில்.

இன்று காலை ஹட்டன் பொலிஸ் நிலைய SOCO பிரிவினர், திடீர் மரண விசாரனை அதிகாரி பார்வை இட்ட பின்னர், ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதிபதி வந்து நேரடியாக பார்வையிட்டு அதனடிப்படையில் விசாரனைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அதுவரை மஸ்கெலியா பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமைகளில் இருப்பார்கள் எனவும் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ் .எஸ்.புஸ்பகுமார தெரிவித்தார்.

மேலதிக விசாரனைகளை மேற்கொண்ட பின்னர் மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் விசாரணைகளை முன்னெடுக்க போவதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மரணித்த மாணவனின் தாய் கொழும்பு சென்று உள்ளதாகவும் மாணவனுக்கு ஒரு அண்ணன் நான்கு சகோதரர்கள் உள்ளனர் மரணித்த மாணவன் வீட்டில் கடைசி பிள்ளை என்று அவனது தந்தை பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

நீதிவான் பார்வை இட்ட பின்னர் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடட் கூற்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்ப்பகுமார தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow