அனைத்து அரசாங்க நிறுவனங்கள், பாடசாலைகள், கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த
விஜேபால தெரிவித்துள்ளார்.
தொன் கணக்கிலும் கிலோகிராம் கணக்கிலும் போதைப்பொருட்கள் தொடர்ச்சியாகக் கைப்பற்றப்பட்டு வரும் நிலையிலும், நாட்டில் அவை இன்னமும் பெருமளவில் புழக்கத்தில் இருப்பதை அடுத்து, போதைப்பொருளை ஒழிக்கும் நோக்குடன் அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாகவே குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.