நாளை காலை 9.00 மணிக்கு விஷேட பூசை மற்றும் பிரார்த்தனை.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பெருந் தோட்ட தொழிலாளர்கள் தங்கள் வசிக்கும் தோட்ட ஆலயங்களில், முன்னாள் ஜனாதிபதி அதி மேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சுகம் பெற்று வீடு திரும்ப வேண்டும் எனவும் அவர் உடன் விடுதலை செய்ய பட்ட வீடு திரும்ப வேண்டும் என விசேட பூசைகள் நடாத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
நாடு வங்குரோத்து அடைந்த வேளையில் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றிய தனி ஒரு நபர் அதி மேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்கள்.
அவரை எந்த ஒரு நிபந்தனை இன்றி விடுதலை செய்ய பட வேண்டும் எனவும் அவர் உடல் நிலை தேரி வைத்திய சாலையில் இருந்து வெளியேறி செல்ல பிரார்த்தனை செய்ய ஏற்பாடு நடக்கிறது.
மஸ்கெலியா நிருபர்.