கண்டி பஹல கடுகண்ணாவில் பெரும் இடர்!
கடுகன்னாவுப் பகுதியில் உள்ள ஒரு வீடு மற்றும் கடை மீது பெரும் பாறை ஒன்று சரிந்ததால் பெரும் இடர்ப்பாடு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்த பலரை மீட்கும் பணி தற்போது இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேகாலை மாவட்ட பேரிடர் முகாமைத்துவ மையம் தெரிவித்ததாவது, பல பேக்கோ இயந்திரங்கள் மற்றும் இராணுவ அணியொன்று மீட்பு பணிக்காக களமிறக்கப்பட்டுள்ளன. பாறை சரிவு காரணமாக கொழும்பு–கண்டி பிரதான சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் கூறினர்.
எங்கள் செய்தியாளர்கள் தெரிவிப்பதாவது, சிலர் மாவனெல்லை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, மூன்று பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர். மேலும் சிலர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும், அவர்கள் வரை சென்றடைய மீட்பு குழுவினர் துரித பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLanka #BreakingNews #Kandy
What's Your Reaction?



