பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது ஜனன தினப் பெருவிழா மற்றும் விசேட தபால் முத்திரை வெளியீடு

SaiSai
Nov 22, 2025 - 14:52
 0  34
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது ஜனன தினப் பெருவிழா மற்றும் விசேட தபால் முத்திரை வெளியீடு

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூறாவது ஜனன தினப் பெருவிழா நிகழ்வு, இலங்கை கொழும்பு புதுச்செட்டித் தெருவில் அமைந்துள்ள சாயி மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று(22) சனிக்கிழமை காலை ஆரம்பமாகியது.

இப் பெரு விழாவின் சிறப்பம்சமாக, ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூறாவது ஜனன தினத்தை முன்னிட்டு இலங்கை அரசின் விசேட தபால் முத்திரை வெளியீட்டு விழா இலங்கையில் அமைந்துள்ள சாயி மத்திய நிலையத்தில் இன்று இபம்பெற்றிருந்தது. சாய் மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கினங்க, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் பரிந்துரைக்கமைய

மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் ஆலோசனை பிரகாரம், இந்த விசேட தபால் தலை(முத்திரை) வெளியிடப்பட்டது.

தபால் தலை வெளியீட்டு விழாவில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ், இலங்கை உயர் நீதிமன்ற சிரேஷ்ட நீதியரசர் எஸ். துரைராஜா, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரபா குமாரரத்னம் ஆகியோருடன், சாயி மத்திய நிலையத்தின் (இலங்கை) தலைவர் எஸ். என். உதயநாயனன், இலங்கை தபால் திணைக்களத்தில் முத்திரை வெளியீட்டுப் பிரிவின் பணிப்பாளர் லங்கா டி சில்வா, விளம்பரப் பிரிவு சிரேஷ்ட அதிகாரி எஸ். ஜலதீபன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையிலிருந்து செய்தியாளர், பிரதி அமைச்சரின் ஊடகசெயலாளர்  

ஆர் ,அஜித்குமார் 

0777532535

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow