இலங்கைக்கு ஜப்பான் அரசின் நிவாரணம்!
கடுமையான காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுவரும் பரவலான சேதங்களை சந்தித்து வரும் இலங்கைக்குத் அவசர உதவி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
ஜப்பான் அரசின் தகவலின்படி, இலங்கையின் உடனடி நிவாரண மற்றும் மீட்பு பணிகளை ஆதரிப்பதற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மூலம் மதிப்பீட்டு குழுவொன்று அனுப்பப்படுகிறது. இந்தக் குழுவில் மருத்துவ அதிகாரிகளும் இடம்பெற உள்ளனர்.
மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஆதரிப்பதற்காக, கூடாரங்கள், போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசிய அவசர நிவாரணப் பொருட்களையும் ஜப்பான் JICA-வின் மூலம் வழங்க உள்ளது.
What's Your Reaction?



