சட்ட விரோதமான கைதுப்பாக்கியுடன் மஸ்கெலியாவில் ஒருவர் கைது!
சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட கை துப்பாக்கியுடன் ஒருவர் கைது. இச் சம்பவம் நேற்று 21 ம் திகதி இரவு 10 மணிக்கு இடம் பெற்றுள்ளது இது குறித்து கருத்து தெரிவித்த மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார சாமிமலை கல்தோனி பகுதியில் 2 ஏக்கர் காணியில் விவசாயம் மேற்கொள்ளும் இகல இங்கிரிய பகுதியைச் சேர்ந்த 44 வயது உடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று இரவு சட்ட விரோதமாக தயாரிக்க பட்ட கை துப்பாக்கி மற்றும் அதற்கு பயன் படுத்த படும் இரண்டு வெடி குண்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார விற்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து சந்தேக நபர் நேற்று இரவு 10 மணிக்கு நடத்த பட்ட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று காலை ஹட்டன் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். செ.தி.பெருமாள்
What's Your Reaction?






