இந்த ஆண்டு 4141 தாதியர்கள் நியமனம்!
இந்த ஆண்டு தாதியர் சேவைக்கு 4,141 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இது வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நிகழ்வு என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்
700 தாதியர் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள் வெள்ளிக்கிழமை (31) வழங்கப்பட்டன.
எதிர்காலத்தில் மேலும் 2,600 பேர் தாதியர் சேவையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நாட்டில் தாதியர் சேவையில் தற்போது சுமார் 43,500 பேர் சேவையில் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
What's Your Reaction?



