மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு மூன்றரை வயது சிறுமி பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு மூன்றரை வயது சிறுமி பலி சிகிரியா, திகம்பதஹ வீதியில், பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காரொன்றின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்றரை வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது மகளை கவட்டியில் வைத்துக்கொண்டு ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது முன்னால் பயணித்த கார் மீது மோதியுள்ளது. இதன் போது சிறுமி தூக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், சம்பவம் தொடர்பாக காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

What's Your Reaction?






