மஸ்கெலியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று நல்லிரவு முதல் கனத்த மழை பெய்தது வருகிறது.
இதன் காரணமாக பெருந்தோட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்க பட்டு உள்ளது மேலும் இப் பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் விவசாயிகள் பெரிதும் பாதிக்க பட்டு உள்ளனர்.
பாடசாலை மாணவர்களின் வருகை மிகவும் குறைவான நிலையில் காணப்பட்டது
தொடர்ந்து கன மழையுடன் எங்கு பார்த்தாலும் பணி மூட்டம் காணப் படுகிறது.
இதன் காரணமாக வாகன சாரதிகளை மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது பெய்து வரும் மழையால் வீதி ஓரங்களில் உள்ள மண் திட்டுகள் சரிந்து விழும் அபாயங்கள் உள்ளதால் மக்கள் பாடசாலை மாணவர்கள் தொழிலாளர்கள் மற்றும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்
What's Your Reaction?



