புத்தளம் உப்பு உற்பத்தியின் சாதனை அறுவடை.
:உப்பு என்றாலே புத்தளம்!!
புத்தளத்தில் தொடரும் வறட்சியான காலநிலை காரணமாக 05 வருடங்களின் பின்னர் சாதனை அறுவடையை எட்டியுள்ளதாக புத்தளம் உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவரும், புத்தளம் மாநகர சபை உறுப்பினருமான M. I. ரனீஸ் தெரிவித்தார்.
இந்த நிலைமைகள் நீடித்தால், அது நாட்டின் உப்புத் தேவையின் பெரும் பகுதியைப் பூர்த்தி செய்ய உதவும் என்று அவர் குறிப்பிடுகின்றார்.
"தற்போதைய மதிப்பீடுகள் அறுவடை 100,000 மெட்ரிக் டன்களை தாண்டும் என்று கூறுகின்றன.
உப்பு உற்பத்தியாளர்களின் கூற்றுப்படி, சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் உப்பு பாத்திகள் நீரில் மூழ்கி உற்பத்தியை பாதித்தது, உள்நாட்டில் உள்ள பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கம் இந்தியாவின் குஜராத்தில், தூத்துக்குடி போன்ற இடங்களில் இருந்து உப்பு இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
உணவு மற்றும் கைத்தொழில் பயன்பாட்டிற்காக இலங்கையின் மொத்த வருடாந்த உப்புத் தேவை சுமார் 180,000 MT ஆகும்.
புத்தளத்துடன், ஆனையிறவு, மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தியும் இந்த பருவத்தில் நம்பிக்கைக்குரிய விளைச்சலை பதிவு செய்துள்ளது.
இதே நேரம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் 4500/= இருந்த உப்பு விலை, அதிக உற்பத்தி காரணமாக சடுதியாக விலை 1800/= வரை குறைந் து விட்டதாக உப்பு உற்பத்தியாளர்கள் அங்கலாய் க்கின்றனர்.
What's Your Reaction?



