இலங்கையின் அரச சேவைகளுக்கான கட்டணங்களை அறவிடுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட, GovPay டிஜிட்டல் கட்டண முறை ஊடாக இதுவரை 1
பில்லியன் ரூபாயிற்கும் அதிகளவான தொகை செலுத்தப்பட்டுள்ளது.
வரி, அபராதம், கட்டண பட்டியல்கள், கல்விக் கட்டணங்கள் மற்றும் ஏனைய அரச சேவைகளுக்காக இந்த தொகை செலுத்தப்பட்டுள்ளது.
GovPay டிஜிட்டல் கட்டண முறை நடைமுறைப்படுத்தப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில், 40,920 பரிவர்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, சுமார் 200 அரச நிறுவனங்கள் தற்போது GovPay டிஜிட்டல் கட்டண முறைமையுடன் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.