சிறுவர் தினத்தை கொண்டாடிய நான்கு மாணவர்கள் கைது!
உலக சிறுவர்கள் தினத்தை கொண்டாடுவதற்காக அம்பலாங்கொடை பாடசாலைக்கு மது போத்தலை கொண்டு வந்த நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 மாணவர்களும் இந்த ஆண்டு சாதாரண தர தேர்வு எழுதவிருந்தவர்கள். நேற்று முன்தினம் (1) மதியம் அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மது கொண்டு வந்ததாக பாடசாலையிலிருந்து கிடைத்த தகவலின்படி, அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது, ஹிக்கடுவையில் உள்ள ஒரு மதுபானக் கடையில் இருந்து மது வாங்கி தண்ணீர் போத்தலில் ஊத்திக்கொண்டு வந்தது தெரியவந்தது.
What's Your Reaction?



