எதிர் வரும் வெள்ளிக்கிழமை 19 ம் திகதி பொகவந்தலாவ நகரில் நடமாடும் சேவை.
எதிர் வரும் 19 ம் திகதி நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொகவந்தலாவ மக்களின் நலன் கருதி நடமாடும் சேவை ஒற்றை நடந்த நோர்வூட் பிரதேச செயலாளர் மற்றும் நுவரெலியா மாவட்ட சமாதான பேரவையின் ஏற்பாட்டில் பொகவந்தலாவ ஹொலிரோசரி வித்தியாலயத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் நடை பெற உள்ளது என நுவரெலியா மாவட்ட சமாதான பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திருமதி.இரேஷா உதேனி தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் பிறப்பு சான்றிதழ்,மரண சான்றிதழ், அடையாள அட்டை, திருமணம் சான்றிதழ், அடையாள அட்டை புதுப்பித்தல் போன்ற பல நிகழ்வுகள் இடம் பெறும்.
வெள்ளி கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு அன்றைய தினம் மாலை 4.00 மணிக்கு இந்த நடமாடும் சேவை நிறைவு பெறும்.
இந்த நடமாடும் சேலையை பயன் படுத்தி கொள்ளுமாறு நோர்வூட் பிரதேச செயலாளர் அப் பகுதியில் உள்ள மக்களை கேட்டு கொள்கிறார்.
What's Your Reaction?



