12,000 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சிதறிய ஹெய்லி குப்பி! வட இந்தியாவுக்கும் பாதிப்பு !

SaiSai
Nov 25, 2025 - 14:15
 0  15
12,000 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சிதறிய ஹெய்லி குப்பி! வட இந்தியாவுக்கும் பாதிப்பு !

12,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை

எத்தியோப்பியாவில் உள்ள எரிமலை குழம்பு வெடித்து சிதறியதை அடுத்து, பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக உறங்கும் நிலையில் இருந்த ஹெய்லி குப்பி எரிமலை 12,000 ஆண்டுகளுக்கு பின்னர் வெடித்துள்ளது.

புவியியல் பதிவுகளின் படி இந்த எரிமலை கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளாக வெடிக்கவில்லை.

செயற்கைக்கோள் தரவுகளின் படி, ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 8.30 மணியளவில் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா மற்றும் மேற்கு ஆசியா விமானங்கள் ரத்து

இதனால் செங்கடல் முழுவதும் தெற்காசியாவை நோக்கி ஒரு பாரிய சாம்பல் மேகம் பரவியதால், இந்தியா மற்றும் மேற்கு ஆசியாவில் நேற்று விமானச் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

எரிமலை குழம்பிலிருந்து வெளியாகும் சாம்பல் புகை இந்தியாவை நோக்கி நகர்வதன் காரணமாகவே, பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

இது தொடர்பாக இந்திய விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்குப் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow