ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசையினால் துண்டிக்கப்பட்ட இணைய சேவை!
செங்கடல் ஆழ்கடல் இணைய சேவைகள் து ணடிப்பு : செங்கடலில் உள்ள ஆழ்கடல் இணைய கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால், ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளில் நேற்று (7) இணைய சேவை பாதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் இணைய சேவைகளைக் கண்காணிக்கும் நெட்பிளாக்ஸ் நிறுவனம் தெரிவிக்கையில் , ‘செங்கடலில் ஏற்பட்ட தொடா் ஆழ்கடல் கேபிள் துண்டிப்புகளால், இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் இணைய இணைப்பு வேகம் குறைந்துள்ளது. சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அருகே உள்ள கேபிள் அமைப்புகளில் ஏற்பட்ட கோளாறுகளே இதற்குக் காரணம்’ என்று தெரிவித்துள்ளது. இதற்குப் பின்னணியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இருக்கக்கூடுமென தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இணையதள சேவைக்கான கேபிள் துண்டிப்பை உறுதி செய்த அவர்கள் இதனை நாங்கள் செய்யவில்லை என மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் செங்கடல் பகுதியில் 100இற்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தினர். இதுவரை 4 கப்பல்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டன. 8 கப்பல் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?






