விநாயகர் சதுர்த்தி நாளில் இதை மட்டும் செய்து விடாதீர்கள்!

விநாயகர் சதுர்த்தி நாளில் இதை மட்டும் செய்து விடாதீர்கள்! விநாயகர் சதுர்த்தி என்பது இந்துக்களில் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். மூலமுதற்கடவுளாக கருதப்படும் விநாயகப் பெருமான் அவதரித்த இன்று தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு நாளை ஆகஸ்ட் 27ஆம் திகதி புதன்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி நாளில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறும். மேலும் பொது இடங்களிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படும். வீடுகளிலும் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது வழக்கம். இத்தகைய சூழ்நிலையில், விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகர் சிலையை வைத்து வழிப்படும் போது என்னவெல்லாம் செய்ய வேண்டும்? எதெல்லாம் செய்யக்கூடாது? என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம். நீங்கள் விநாயகர் சதுர்த்தி நாளில் எந்த சிலையை வைத்து வழிபட்டாலும், கண்டிப்பாக விநாயகர் தலையில் கிரீடம் மற்றும் குடை இருக்க வேண்டும். ஒருவேளை அவை இல்லையென்றால் பலன்கள் முழுமை பெறாது. அவ்வாறு கிரீடம் மற்றும் குடை வைத்து வழிபட்டால் அதிர்ஷ்டம் கிடைக்கும். பல நன்மைகள் வந்து சேரும். விநாயகர் உட்கார்ந்த நிலையில் இருக்கும் சிலையை தான் வைத்து வழிபட வேண்டும். விநாயகர் சதுர்த்தியான இன்று தப்பி தவறி கூட இதை செஞ்சிடாதீங்க | Don T Do This Even Miss It Day Ganesha Chaturthi விநாயகர் சிலையுடன் அவரது வாகனம் மற்றும் அவருக்கு விருப்பமான மோதகம் வழிபாட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். விநாயகருக்கு சிறப்பு நிற ஆடை அணிவித்து வழிபடுவது நல்லது. விநாயகர் சதுர்த்தியான இன்று தப்பி தவறி கூட இதை செஞ்சிடாதீங்க | Don T Do This Even Miss It Day Ganesha Chaturthi விநாயகர் சிலையானது வீட்டில் கிழக்கு, மேற்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும். விநாயகருக்குரிய பாடலை பாடி, மணி ஓசை எழுப்பி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது வீட்டிற்கு பல நன்மைகளை கொண்டு வரும்.

SaiSai
Aug 27, 2025 - 13:19
 0  18
விநாயகர் சதுர்த்தி நாளில் இதை மட்டும் செய்து விடாதீர்கள்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow