வசீம் தாஜுத்தீனை கொல்லுவதற்கு சென்ற வாகனத்தில் இருந்த கஜ் ஜா - கசிந்த உண்மை!!
அன்பு மகனின்,
"ஒரு தலைக் காதல் தோல்வி" யால் வசீம் தாஜுத்தீன் கொல்லப் பட்டார்!!
வசீம் தாஜுத்தீனை கொல்லுவதற்கு சென்ற வாகனத்தில் இருந்த கஜ் ஜா - கசிந்த உண்மை!!
தென் மாகாணத்தில் மித்தெனிய கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட பாதாள குழு செயற்பாடுகளுடன் தொடர்புடைய பாதாள உலகக் கொலைகளுக்குப் கெஹெல்பத்தர பத்மேவுக்குச் சொந்தமான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
மதுகமவிலிருந்து மித்தெனிய வரை குறித்த ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டு கொலைகளை செய்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மனம்பேரி கூறியுள்ளார்.
பக்கோ சமன் என்ற பாதாள உலகத் தலைவரின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த ஆயுதத் தொகை விநியோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்காக தனக்கு எந்தப் பணமும் கிடைக்கவில்லை என்றும் சந்தேக நபர் கூறியுள்ளார்.
இதற்கமைய, பாதாள உலக தரப்புக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களில் 3 டி-56 துப்பாக்கிகள், 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு பெரிய அளவிலான தோட்டாக்கள் இருந்ததாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
தான் கொடுத்த டி-56 துப்பாக்கியால் மித்தெனியவில் ‘கஜ்ஜா’வையும் அவரது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்யப்பட்டனர் என மனம்பேரி குறிப்பிட்டுள்ளார். இந்த ஆயுதங்களை கொண்டு செல்வதற்கு சம்பத் மனம்பேரி தனது அரசியல் அதிகாரத்தையும் பாதுகாப்புப் படைகளில் உள்ள தொடர்புகளையும் பயன்படுத்தியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை சம்பத் மனம்பேரியால் எடுத்துச் செல்லப்பட்ட ஆயுதங்கள் இராணுவத்திலிருந்து திருடப்பட்டவையான இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பத் மனம்பேரி, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் இருந்து பேலியகொட குற்றப்பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான ரோஹன் ஒலுகல மற்றும் லிண்டன் சில்வா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற விசாரணைகளுக்கமைய இந்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
இதேவேளை வசீம் தாஜூதீனின் மரணம் தொடர்பிலும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
வசீம் தாஜூதீன் மரணிப்பதற்கு முன்னர் அவர் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற வாகனத்தில் இருந்த நபர் தொடர்பில் தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பொலிசார் இதனை தெரிவித்துள்ளனர்.
கஜ்ஜா எனப்படும் அருண விதானகே குறித்த வாகனத்தில் இருந்ததாக பொலிசார் ஊடக சந்திப்பில் தெரிவித்தனர்.
வசீம் தாஜூதீன் உயிரிழப்பதற்கு முன்னர் அவரது வாகனம் பயணித்த வீதி தொடர்பிலான சிசிடிவி கெமரா காட்சிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் இந்தோனேஷியாவில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பாதாள குழு உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கஜ்ஜாவின் மனைவியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் வசீம் தாஜூதீன் உயிரிழப்பதற்கு முன்னர் அவர் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற வாகனத்தில் இருந்தது கஜ்ஜா எனப்படும் அருண விதானகமகே என்ற நபர் என தெரியவந்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
What's Your Reaction?



