பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை எதிர்த்த அரசியல்வாதிகளின் கொடும்பாவிகள் எரிப்பு!

SaiSai
Nov 17, 2025 - 07:41
 0  21
பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை எதிர்த்த அரசியல்வாதிகளின் கொடும்பாவிகள் எரிப்பு!

தோட்ட மக்களுக்கான 200 ரூபாய் சம்பள உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிப்பதைக் கண்டித்து, நேற்று (16) பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இருப்பினும், அரசாங்கத்தால் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள இந்த ரூ. 200 கொடுப்பனவு சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டு, இந்தக் கொடுப்பனவை வழங்குவதைத் தடுக்க எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாகக் கூறி, இதற்கு முழுமையாக எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த போராட்டம் நடத்தப்பட்டது. 

இதன் போது, பொகவந்தலாவ நகரில், தோட்டத் தொழிலாளர்கள் ஒரு சவப்பெட்டியை ஏந்தி ஊர்வலமாகச் சுற்றி வந்து எதிர்க்கட்சியினர் சிலரின் புகைப்படங்களையும், உருவப் பொம்மைகளையும் எரித்து, எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow