நள்ளிரவில் கொழுந்து விட்டு எரிந்த தேயிலை தொழிற்சாலை!
ஆர் பி,கே,பிளான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் தீ.
மஸ்கெலியா லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் 1968 ல் கட்ட பட்ட தேயிலை தொழிற்சாலை 8 ம் திகதி நல்லிரவு சுமார் 12.15 மணியளவில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது என அத் தோட்டத்தில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
தீயை அணைக்க தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் நல்ல தண்ணி பொலிஸ் அதிரடி படையினர் முன் வந்த போதும் தீயை அணைக்க முடியவில்லை நீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது என தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தீ பரவியதற்க்கான காரணம் தெரியவில்லை என்று அத் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் தெரிவித்தார்கள்.
அப் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்க பட்டு உள்ளது என காவல் துறை பிரிவு தெரிவித்தது.
மஸ்கெலியா நிருபர்.
What's Your Reaction?



