தென்கடல் போதைப் பொருள் மீட்பு முன்னாள் SJB பிரதேச சபை உறுப்பினர் கைது!

SaiSai
Nov 21, 2025 - 10:19
 0  12
தென்கடல் போதைப் பொருள் மீட்பு முன்னாள் SJB பிரதேச சபை உறுப்பினர் கைது!

தென் கடல் போதைப்பொருள் - SJBயின் முன்னாள் உறுப்பினர் கைது

தென் கடற்பரப்பில் நேற்று (20) போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக வினவியபோது, பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இலங்கை கடற்படையினர் குறித்த நெடுநாள் மீன்பிடிப் படகையும் அதிலிருந்த 6 மீனவர்களையும் தற்போது தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ளனர். 

பாதுகாப்புத் தரப்பினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே இந்த மீன்பிடிப் படகு கண்டுபிடிக்கப்பட்டது. 

குறித்த படகிலிருந்து 15 போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதில் 300 கிலோ ஹெரோயின், 02 துப்பாக்கிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow