தாஜுதீனின் காரை பின் தொடர்ந்து சென்ற சாரதி இவரா?
கஜ்ஜா பற்றி ஒரு புதிய கண்டுபிடிப்பு:
ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் தலைவிதியை முடிவு செய்த அன்று இரவு தாஜுதீன் பயணித்த காரை துரத்திச் சென்றவர் கஜா எனப்படும் அனுர விதானகமகே என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கஜாவின் மனைவி வழங்கிய சாட்சியத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், தாஜுதீனின் கொலைக்கு நேரடிப் பொறுப்பு யார் என்பதை இதுவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கண்டறிய முடியவில்லை.
தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட போது கஜா என அழைக்கப்படும் அனுர விதானகமகே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் உள்ள அமைச்சு ஒன்றில் சாரதியாக கடமையாற்றியதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
What's Your Reaction?



