டிரான் அலஸ்க்கு விடுக்கப்பட்டுள்ள இறுதி எச்சரிக்கை!

டிரா‌ன் அலஸுக்கு உயிர் ஆபத்தா? முன்னாள் அமைச்சர் டிரானுக்கு இறுதி எச்சரிக்கை! நாட்டை விட்டுத் தப்பிச் சென்று வெளிநாடுகளில் இருந்து செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர்களிடமிருந்து, முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு தொடர்ச்சியாக மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும், அது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 'யுக்திய' (நீதி) நடவடிக்கையினால் தமது உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற நேரிட்டதாகவும், அதனால் தமது வியாபாரங்கள் அழிந்து, குடும்பங்கள் சிதைந்து சிதறிப் போனதாகவும் குறிப்பிட்டு, நிச்சயமாக இதற்குப் பழிவாங்குவதாகவும், உயிருடன் இழப்பீடு வழங்கத் தயாராகுமாறும் தெரிவித்து, அரபு இராச்சியத்திலிருந்து டிரான் அலஸுக்கு ஒரு அநாமதேய கடிதம் முதன்முறையாக கடந்த மே மாதம் 04ஆம் திகதியிடப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது. கடந்த ஜூலை 09ஆம் திகதி, முன்னாள் அமைச்சரின் அலுவலகத்திற்கு அக்கடிதம் கிடைத்த நிலையில், உடனடியாக அது பதில் பொலிஸ்மா அதிபரிடம் அனுப்பப்பட்டதன் பின்னர், டிரான் அலஸிடம் வாக்குமூலம் பெறப்பட்டு விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இதேவேளை, கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி "இறுதி அறிவித்தல்" எனக் குறிப்பிட்டு அச்சுறுத்தல் விடுக்கும் கடிதம் ஒன்று டுபாயிலிருந்து முன்னாள் அமைச்சரின் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் உள்ள முத்திரைக் குறிப்புகளின்படி, அது ஜூலை 16ஆம் திகதி தபால் செய்யப்பட்டது. எவ்வளவு பாதுகாப்பின் கீழ் இருந்தாலும், அதிக நாட்கள் செல்வதற்குள் கொலை செய்துவிடுவதாக அந்தக் கடிதத்தின் மூலம் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் அந்த எழுத்து மூலமான கடிதத்தையும் பொலிஸ்மா அதிபரிடம் அனுப்பியுள்ளதாக மேற்கண்ட தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

SaiSai
Sep 11, 2025 - 22:32
 0  27
டிரான் அலஸ்க்கு விடுக்கப்பட்டுள்ள இறுதி எச்சரிக்கை!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow