செம்மஞ்சள் நிறத்தில் மாறிய பாரளுமன்றம்!
பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராகப் பாராளுமன்றம் செம்மஞ்சள் நிறமாக மாறியது.
2025 உலகளாவிய கருப்பொருள் - "அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும் எதிரான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்"
சட்டங்களை உருவாக்குவதைத் தாண்டி, பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பதற்கு சமூகப் பொறுப்பும் கவனமும் தேவை என பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய தெரிவிப்பு
பாராளுமன்றத்திற்குள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மொழியாகவோ துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், நிலையியற் கட்டளைகளை திருத்துவதற்கான முன்மொழிவைக் கௌரவ சபாநாயகரிடம் சமர்ப்பிக்க பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவிப்பு
பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான (GBV) 16 நாட்கள் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் பல நிகழ்ச்சிகள் நேற்று (24) நடத்தப்பட்டன. அதற்கமைய, பால்நிலைசார் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதைக் குறிக்கும் இலச்சினைகள் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோருக்கு அணிவிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் செம்மஞ்சள் நிறம் அல்லது செம்மஞ்சள் நிறம் கலந்த ஆடைகளை இன்றைய தினம் அணிந்து வந்திருந்தனர்.
What's Your Reaction?



