செட்டியார் தெருவில் கொள்ளை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது!
கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள 2 நகைக் கடைகளில் 10 கோடியே 20 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் மதுவரி அதிகாரிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம் பெறுவதற்கு அழைக்கப்பட்ட நிலையில், குறித்த 05 பேரும் இன்று (30) கைது செய்யப்பட்டு எதிர்வரும் 7 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுவரி அதிகாரிகள் செட்டியார் தெருவில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, 10 கோடியே 20 இலட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள், சட்டவிரோத சிகரெட்டுக்கள் வைத்திருந்ததாக கூறப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்களின் கீழ் 07 பேரை கைது செய்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 03 பேரை மாத்திரம் அன்றைய தினமே அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். அதன் பின்னர் தாம் கையகப்படுத்திய பணத்தில் 05 கோடி ரூபாயை மாத்திரம் திருப்பி செலுத்தியுள்ளனர்.
எனினும், எஞ்சிய பணம் தொடர்பில் அதிகாரிகள் எவ்வித தகவல்களையும் வெளியிட்டிருக்கவில்லை. இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ர்களால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைபாடு செய்யப்பட்டது. மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் 05 பேரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?



