சாய்ந்தமருது - வொலிவேரியன் பகுதியில் பயங்கர விபத்து
இன்று அதிகாலை கனமழை மற்றும் வெள்ள நீர் காரணமாக ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் பின்புற வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று பாதையை விட்டு விலகி அருகிலுள்ள பெரிய கால்வாய்க்குள் தவறி விழுந்தது
காரில் இருந்த மூன்று பேர்
ஒரு ஆண், ஒரு பெண், ஒரு சிறுமி)
நீரில் மூழ்கி சிக்கிக் கொண்டனர்.
சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் கடும் போராட்டத்துக்குப் பிறகு
மாளிகைக்காடு ஜனாஸா குழு, சுழியோடிகள் மீட்புக்குழு, கடற்படையினர் , பொலிஸார் , பிரதேச செயலகம், மாநகர சபை ஊழியர்கள் & பொதுமக்கள் ஒன்றிணைந்து காரை கரைக்கு இழுத்தனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மூவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
சம்பவ இடத்தில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார், சாய்ந்தமருது பொலிஸ் OIC எஸ்.எல். சம்சுதீன், பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் உட்பட பலரும் இருந்தனர்.விசாரணைகள் தொடர்கின்றன.
What's Your Reaction?



