கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமானப் பயணம் ஆரம்பம்...

SaiSai
Oct 3, 2025 - 17:55
 0  19
கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும்  இடையிலான விமானப் பயணம் ஆரம்பம்...

#கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் 

இடையிலான விமானப் பயணம் ஆரம்பம்...

பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் (water Aerodrome) பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையில் பயணிக்கும் விமான சேவை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இன்று (03) நடைபெற்றது.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு படியாகவும், உள்நாட்டு விமானங்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் மற்றொரு படியாகவும் இந்த கொழும்பு-கட்டுநாயக்க விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

தற்போது இலங்கையில் நீர் விமானப் பயணங்களை மேற்கொள்ளும் சினமன் எயார் லைன்ஸ், இந்த கொழும்பு-கட்டுநாயக்க விமானப் பயணங்களை மேற்கொள்ளும். இந்த புதிய விமான சேவையின் ஊடாக, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்கள் குறுகிய காலத்தில் கொழும்பு நகரத்திற்கு விரைவாகவும் வசதியாகவும் பயணிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow