உரிய நேரத்தில் கடிதங்கள் கிடைப்பதில்லை-கொட்டக்கலை ஸ்டோனிகிளிப் மக்கள்.
கொடக்கலை தபால் நிலையத்திலிருந்து தங்களுக்கு உரிய நேரத்தில் தபால்கள் கிடைப்பதில்லை என்று ஸ்டோனி கிளிப் தோட்ட மக்கள் தெரிவிப்பு!
நுவரெலிய மாவட்டத்திற்கு உட்பட்ட கொட்டகலை தபால் நிலையத்தில் இருந்து ஸ்டோனி கிளிப் தோட்டத்துக்கான தபால் சேவை கிரமமாக நடைபெறுவதில்லை என தோட்ட பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் இத்தோட்டத்துக்கான தபால் ஊழியர் சுகயீனம் அடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக பணியில் இருக்கும் தபால் ஊழியர் நேரத்துக்கு கடிதங்களை உரியவருக்கு கொண்டு வருவதில்லை தினமும் மக்கள தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக கொட்டக்கலை அஞ்சல் அதிபரை எமது செய்தி சேவை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. எனவே இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
What's Your Reaction?



