இலங்கை தேர்தல் ஆணையத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மலையக அரசியல் அரங்கம்.
தேர்தல் ஆணையகத்துக்கான சர்வதேச விருது இலங்கையின் ஜனநாயகத்துக்கான வெற்றியாகும்
- மலையக அரசியல் அரங்கம் வாழ்த்துத் தெரிவிப்பு
2025 ஆம் ஆண்டின் சிறந்த தேர்தல் ஆணையகமாக் இலங்கைத் தேர்தல் ஆணையகம் உலகளாவிய ரீதியில் தெரிவ செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பது இலங்கையின் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாகும் என மலையக அரசியல் அரங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச பாராளுமன்ற கற்கைகளுக்கான நிலையமும் போட்ஸ்வானா தேர்தல்கள் ஆணையகமும் இணைந்து ஒழுங்கு செய்த 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச தேர்தல்கள் விருது விழாவில் ;இலங்கை தேர்தல் ஆணையகத்துக்கு இத்தகைய கிடைக்கப்பெற்றுள்ளது. 2025 ஒக்டோபர் 03 ஆம் திகதி போட்;ஸ்வானா நாட்டில் இடம்பெற்ற விருதுவிழாவில் தேர்தல் ஆணைக்குழு சார்பில் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேற்படி விருதினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
மேற்படி விருதினை இலங்கை தேர்தல்கள் ஆணையகம் பெற்றுக்கொண்டுள்ளமை தொடர்பில் தனது வாழத்துக்களைத் தெரிவித்துள்ளது. மலையக அரசியல் அரங்கம் விடுத்திருக்கும் வாழத்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனநாயக மாண்பினை பாதுகாப்பதோடு; தேர்தல் முகாமைத்துவத்தில் சிறந்த செயல்திறனையும் சிறப்பான பங்களிப்புகளையும் வழங்குகின்ற அமைப்புகளை அங்கீகரிக்கின்ற சர்வதேச விருது விழாவில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு 2025 ஆம் ஆண்டுக்கா விருதினை வென்றுள்ளது. பொறுப்புணர்வு மிக்க குடிமக்கள் சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் தேர்தல் பணியாளர்களின் சிறந்த நடைமுறைகள், ஆதார அடிப்படையிலான ஆய்வுகள் மற்றும் வலுவான கொள்கைகளை முன்னிறுத்துவதிலும் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியமையாக்காக இந்த விருதுக்காக இலங்கை தேர்தல்கள் ஆணையகம் இந்த விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு சவால்களுக்கிடையில் ஜனநாயக மாண்புகளை நிலைநிறுத்தும் உறுதிப்பாட்டுடன் தேர்தல் நேர்மையை வலுப்படுத்தும் முயற்சியாக திறமையான செயல்திறனை வெளிப்படுத்தி வரும் இலங்கை தேர்தல் ஆணையகத்துக்கு கிடைத்துள்ள் இந்த விருது இலங்கையின் ஜனநாயகப் போக்குக்கு கிடைத்த வெற்றியாகும். இலங்கை தேர்தல் ஆணையகம் தனது சுயாதீன தனன்மையை தொடர்ந்தும் பாதுகாத்து எமது நாட்டின் ஜனநாயக மாண்பினை உலக அளவில் முன்னிறுத்த மலையக அரசியல் அரங்கம் வாழத்துக்களைத் தெரிவிக்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?



