இந்த ஆண்டு மாலை அணிந்து செல்பவர்கள் கட்டாயம் இதை செய்ய வேண்டும்.

SaiSai
Nov 17, 2025 - 10:55
 0  48
இந்த ஆண்டு மாலை அணிந்து செல்பவர்கள் கட்டாயம் இதை செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு சபரிமலை போறீங்களா?...இதெல்லாம் தெரிந்து கொள்ள மறந்துடாதீங்க

 

சபரிமலை செல்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை :

இந்த ஆண்டு மண்டல-மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளது.

நவம்பர் 17ம் தேதி அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை நவம்பர் 17ம் தேதி துவங்கி, டிசம்பர் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.

டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை, படி பூஜைக்கு பிறகு இரவு ஹரிவராசனம் பாடப்பட்டு, கோவில் நடை அடைக்கப்படும்.

மகரவிளக்கு மகோற்சவத்திற்காக மீண்டும் டிசம்பர் 30ம் தேதி அதிகாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்படும்.

2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி மகரசங்கராந்தி நாளில் மகரவிளக்கு உற்சவம் நடைபெற உள்ளது.

2026ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும். பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்கான விர்சுவல் க்யூவிற்கான ஆன்லைன் புக்கிங் நவம்பர் 01ம் தேதி துவங்கப்பட்டு, நவம்பர் 05ம் தேதி மாலையுடன் நிறைவடைந்து விட்டது.

சாமி தரிசனம், பூஜைகள், சன்னிதானத்தில் தங்குவதற்கான ஆன்லைன் புக்கிங் நவம்பர் 05ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

இந்த ஆண்டு சபரிமலை செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று உங்களின் ஆதார் எண், மொபைல் நம்பர், பெயர் உள்ளிட்ட விபரங்களை அளித்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் ஒரு நாளைக்கு 70,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.

நேரடியாக சபரிமலைக்கு வந்து ஸ்பாட் புக்கிங் செய்து வரும் பக்தர்கள் ஒரு நாளைக்கு 20,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஸ்பாட் புக்கிங் செய்வதற்கான கவுன்ட்டர்கள் எரிமேலி, நிலக்கல், பம்பா, வண்டி பெரியாறு கெஸ்ட் ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சபரிமலையில் இந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத துவக்கத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், டிசம்பர் முதல் வாரத்திற்கு பிறகு மழை படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மைய கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சமயத்தில் சபரிமலை செய்ய திட்டமிட்டிருக்கும் பக்தர்கள் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள

இந்த ஆண்டு சபரிமலை போறீங்களா?...இதெல்லாம் தெரிந்து கொள்ள மறந்துடாதீங்க

கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து மண்டல விரதத்தை துவக்கவும், சபரிமலை யாத்திரை மேற்கொள்ளவும் ஐயப்ப பக்தர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இந்த ஆண்டு சபரிமலை செல்ல திட்டமிட்டிருக்கும் பக்தர்கள் தங்களின் யாத்திரையை துவக்குவதற்கு முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

 கார்த்திகை மாதத்தில் வரும் முதல் நாளில் சுத்தமாக குளித்து தாய் தந்தை அல்லது குருவாக ஏற்றுக் கொள்ள கூடியவர்களிடம் மாலை அணிந்து கொள்ள வேண்டும்.கருப்புஅல்லது நீல வர்ண ஆடைகள் அணிவது அவசியம் பாதணி தவிர்க்க வேண்டும்.

புழால் உணவுகள் உண்ண கூடாது, முகச்சவரம் செய்தல் முடி வெட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. காலை மாலை ஐயப்பன் சரண கோஷங்கள் பஜனைகள் செய்து வழிபட வேண்டும்.விரதத்தின் காமம் லோபம் குரோதம் மதமாச்சர்யம் போன்ற குணங்கள் அழிக்க வேண்டும்.

பிரமாச்சார்ய விரதம் மிக முக்கியமான ஒன்றாகும். முழுநேர இறைச்சிந்தனை தியானம் என்பன கடைப்பிடிக்க வேண்டும்.48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை யாத்திரை சென்று பெருவழி வழியாக சந்நிதானம் அடைந்து ஐயனின் அருளைப் பெற்று.மகர ஜோதியை தரிசிக்க வேண்டும்.

இவையனைத்தையும் முழு மனதுடன் தூய்மையுடன்  செய்தால் ஐயனின் அருளைப் பெறலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow