இந்திய விசா தொடர்பான முக்கிய அறிவிப்பு!
இந்தியாவுக்கான அனைத்து விசா செயற்பாடுகளையும், எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி முதல் இந்திய உயர்ஸ்தானிகரகம் நேரடியாக கையாளவுள்ளது.
அதன்படி தற்போது இந்திய விசாக்களை பெற்றுக் கொடுக்கும் வெளிப்புற சேவை வழங்குநரான ஐ.வி.எஸ். லங்கா நிறுவனத்தின் சேவைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மாத்திரமே முன்னெடுக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
குறித்த சேவை வழங்குநருடனான ஒப்பந்த காலம் நிறைவடைவதால், தற்காலிக ஏற்பாடாக இந்திய உயர்ஸ்தானிகரகம் மற்றும் கிளை அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து விசாக்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.
What's Your Reaction?



