இந்திய கிரிக்கெட் அணிக்கு அதிரடியாக நிபந்தனை வைத்த மோசின் நக்வி!
இந்திய கிரிக்கெட் அணி வெற்றிகொண்ட, ஆசியக் கிண்ணம் மற்றும் பதக்கங்களை மீள வழங்குவதற்கு தயாராக இருந்தாலும் விசேட நிபந்தனை ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவருமான மோசின் நக்வி கூறியுள்ளார்.
இதன்படி, முறையான விழா ஏற்பாடு செய்யப்பட்டால் மாத்திரமே சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது வீரர்களுக்குப் பதக்கங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. எனினும், பாகிஸ்தானின் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவரான மோசின் நக்வியிடம் இருந்து, ஆசியக் கிண்ணத்தைப் பெற்றுக்கொள்வதில்லை என இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கிண்ணம் மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு வழங்கப்படவில்லை.
What's Your Reaction?



