அநுராதபுர பஸ் விபத்தில் ஐவர் உயிரிழப்பு

SaiSai
Nov 10, 2025 - 16:10
 0  20
அநுராதபுர பஸ் விபத்தில் ஐவர் உயிரிழப்பு

அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் இன்று (10) பிற்பகல் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தனியார் பஸ் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிட முயன்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow