வீ லீட் லங்கா வுடன் இணைந்து பெரண்டினா நிறுவனம் முன்னெடுத்த தரமான வேலைத்திட்டம்.
பெரெண்டினா நிறுவனம் பெருந்தோட்ட பகுதிகளில் தொடர்ந்து முன்னெடுத்து வரும் சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, WE LEAD LANKA நிறுவனத்தின் அனுசரணையுடன் கட்டப்பட்ட புதிய வீடு, 01.11.2025 அன்று பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பெரெண்டினா நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் திரு A. சிவசந்திரன், WE LEAD LANKA நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திரு P. திருச்செல்வம், பெரெண்டினா நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி திருமதி வனிதா மற்றும் திரு நவஜூட், WE LEAD LANKA சார்பில் திரு லஷந்த மற்றும் திருமதி லூசியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமூக நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, பெருந்தோட்ட மக்கள் வாழ்வாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?



