ரயில் மோதுண்டு பெண் படுகாயம்!

SaiSai
Sep 28, 2025 - 20:04
 0  176
ரயில் மோதுண்டு பெண் படுகாயம்!
ரயில் மோதுண்டு பெண் படுகாயம்!
ரயில் மோதுண்டு பெண் படுகாயம்!

இன்று 28 ஆம் தேதி மதியம் 1:30 மணியளவில் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதத்தில் இயந்திரம் பகுதியில் மோதியதில் பெண் ஒருவர் சிக்கிக் கொண்டதால் படு காயங்களுடன் மீட்டனர். 

இந்த விபத்து இன்று ஹட்டன் மல்லியப்பு சந்திக்கு அருகில் ஏற்பட்டது. 

இன்று 28 ஆம் தேதி மதியம் 1:30 மணியளவில் ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள மல்லியப்பு சந்திக்கு அருகில் உள்ள பிரதான ரயில் சாலையில் இருந்து ரயில் வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. 

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி ரயில் மோதுண்டு படு காயமடைந்த நிலையில் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டது.

இதன் காரணமாக ரயில் நீண்ட நேரம் மக்கள் காத்திருக்க நேரிட்டது என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்து ஹட்டன் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மஸ்கெலியா நிருபர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow