மரக்கறி வகைகளின் விலையில் வீழ்ச்சி!
தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு காய்கறிகள் அதிக அளவில் வரும் நிலையில், காய்கறி விலைகள் வேகமாக குறைந்து வருவதாகவும், அதிக விலை கொடுத்து காய்கறி வாங்காமல் நேரடியாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு வந்து வாங்குமாறு நுகர்வோரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தம்புள்ள பொருளாதார மத்திய நிலைய வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நேரத்தில் உயர்ந்த விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யாமல் இருக்கவும் அனைத்து விற்பனையாளர்களிடமும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தம்புள்ள பொருளாதார மத்திய நிலைய வணிகர் சங்கத்தின் தலைவர் சி.எஸ். சிறிவர்தன தெரிவித்துள்ளார், தற்போது மத்திய நிலையத்தில் அனைத்து காய்கறிகளும் முன்பை விட மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, 02ஆம் திகதி காலை தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில்
கேரட் 1kg – ரூ.300 முதல் 350 வரை
கோஸ் 1kg – ரூ.50 முதல் 60 வரை
பீன்ஸ் 1kg – ரூ.650 முதல் 700 வரை
கத்தரிக்காய் 1kg – ரூ.100 முதல் 150 வரை
பூசணி 1kg – ரூ.30 முதல் 50 வரை
பச்சை மிளகாய் 1kg – ரூ.250 முதல் 300 வரை
என விலைகள் வேகமாக குறைந்து இருப்பதாக அவர் கூறினார்.
எனவே, மத்திய நிலையத்தின் மொத்த விலைகளுக்கு தொடர்ந்து கவனம் செலுத்தி காய்கறிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வணிகர்கள் நுகர்வோரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதேசமயம், அந்தப் பகுதியின் சில்லறை காய்கறி கடைகளில் விலைகள் அதிகரித்திருப்பதையும் காண முடிந்தது.
---
What's Your Reaction?



