இலங்கையில் தொடரும் போலி வாகன பதிவுகள்!

SaiSai
Oct 3, 2025 - 20:09
 0  16
இலங்கையில் தொடரும் போலி வாகன பதிவுகள்!

எங்கும் போலி எங்கும் திருட்டு :

போலியான தகவல்களைப் பயன்படுத்தி வாகனங்களை பதிவு செய்த சம்பவங்கள் தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் குழுவிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 பொலிஸாரின் கூற்றுப்படி, கடந்த சில வாரங்களாக தீவின் பல்வேறு பகுதிகளில் மோசடி விவரங்களுடன் பதிவு செய்யப்பட்ட எட்டு வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த வாகனங்கள் சுங்க அனுமதி மூலம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும், ஆனால் பின்னர் பழைய வாகனங்களின் சேசி எண்களில் பதிவு செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடியில் சில மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளின் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. உத்தியோகபூர்வ வேலை நேரத்திற்குப் பிறகு சில வாகனங்களின் பதிவு தொடர்பான தரவு கணினி அமைப்பில் உள்ளிடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடரும் விசாரணையின் ஒரு பகுதியாக நீதிமன்ற உத்தரவின் கீழ் ஏற்கனவே பல மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow