பனைசார் கைப்பணி பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்.

SaiSai
Nov 11, 2025 - 09:24
 0  18

பனைசார் கைப்பணி பயிற்சி நெறியை
நிறைவு செய்தவர்களுக்கு  சான்றிதழ்

பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பிரதம அதிதி 

பனைசார் கைப்பணிப் பொருட்களின் பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் திருகோணமலை பிரதேச சபை மண்டபத்தில்  இன்று (09) நடைபெற்றது.

பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கடமைப்பு வசதிகள் அமைச்சு மற்றும் பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் திருகோணமலை பனை அபிவிருத்தி சபைக் கிளையின் மேற்பார்வையில் இவ்வைபவம் நடத்தப்பட்டது. 

 பிரதம அதிதியாக பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்   பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், விசேட அதிதியாக வெளிநாட்டு அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு  பிரதியமைச்சர்   அருண் ஹேமச்சந்திரா  ஆகியோரும் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன்  பனைசார்ந்த கைத்தொழில்களை விருத்தி செய்யும் முகமாக பயனாளிகளுக்கு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

பயனாளிகளுடன் கலந்துரையாடி அவர்களுடைய தேவைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து அதற்கு தேவையான ஆலோசனைகளை பனை அபிவிருத்தி சபையின் தலைவருக்கு வழங்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், பனை அபிவிருத்தி சபையின் தலைவர் மற்றும் அதிகாரிகள்   அமைச்சின் எனது ஒருங்கிணைப்புச் செயலாளர் சிவனேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow